வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது
வவுனியா (Vavuniya) பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் வைரவ புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஒருவர் கைது
இதனை தொடர்ந்து, விசேட பொலிஸ் குழு வவுனியா, வைரவ புளியங்குளம், புகையிரத வீதி ஒன்றில் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த சிறிய வெற்றிலை கடை ஒன்றினை சுற்றி வளைத்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த 140 கிராம் மாபா, ஒரு கிலோ மாபா கலந்த பாக்கு உள்ளிட்ட போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |