யாழில் வளர்ப்பு நாயால் மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
கடந்த மாதம் 24 ஆம் திகதி வளர்ப்பு நாய் கடித்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் தவிர்த்துள்ளார்.
சில வாரங்களுக்கு பின்னர் மூதாட்டிக்கு பக்றீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தோல் வியாதி ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று(26) உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
