உளுந்து பயிர் செய்கையை தாக்கும் ஒருவகை நோய் தொற்று
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய்த் தொற்று காரணமாகக் குறித்த செய்கையினை முழுமையாக அழிக்கும் நிலைக்குத் தோட்டச் செய்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பாலையடி புதுக்குளம், பாலப்பெருமாள் கட்டு, குருவில் ஆகிய கிராமங்களில் மேட்டு நில பயிர்ச் செய்கையான தோட்டச் செய்கை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வருடம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து மற்றும் கச்சான் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வருடம் உரம், மற்றும் கிருமி நாசினி போன்றவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணமாக உளுந்து பயிர் செய்கையைத் தாக்கிய ஒரு வகை நோயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அப்பகுதி விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது குறித்த உளுந்து பயிர் செய்கையை முழுமையாக அழிக்கும் நடவடிக்கையில் தோட்டச் செய்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உரம், மற்றும் கிருமி நாசினி போன்றவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணமாக தமது பயிர்களுக்கு அதனை உரிய நேரத்தில் பயன்படுத்தாத காரணத்தினாலேயே குறித்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.










போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
