நாடுபூராகவும் முன்னெடுக்கப்படும் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நாடுபூராகவும் முன்னெடுத்துள்ள நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (19.06.2024) கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எம் பியதிஸ்ஸ, உதவி மாவட்ட செயலாளர், பொலிஸ் அதிகாரி மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான “வெல்வோம் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை எதிர்வரும் ஜீலை மாதம் 12ஆம் திகதி மற்றும் 13ஆம் திகதிகளில் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |