அரசுக்குக் காத்திருக்கும் பேரிடி: சஜித் ஆரூடம்
"அரசு எப்போதும் மக்களுக்குச் சார்பான செயற்பாடுகளையேயன்றி மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்து வருகின்றது. அதன் விளைவுகள் அரசுக்குப் பேரிடியாக விழும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "குளிரூட்டி அறைகளில் இருந்து அரசு எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியாதுபோகும்.
உரத்தடைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தன்னிச்சையான முடிவுகளை அரசு நினைவுகூர வேண்டுமென நினைவூட்டுகின்றோம்.

தந்திரமான முயற்சியா..!
நாடு மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், நாடு முழுவதும் சோறு போடும் விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவதால் ஏற்படும் விளைவுகளை அரசு மட்டுமல்லாது நாடு முழுதும் அனுபவிக்க நேரிடும்.
இது நாட்டின் விவசாயத்தை முடக்குவதற்கு எடுக்கும் அரசின் நுட்பமான மற்றும் தந்திரமான முயற்சியா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
விவசாயிகளை மேலும் ஏமாற்றாமல் அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான தண்ணீரை அரசு திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam