முல்லைத்தீவில் இறந்த நிலையில் யானை மீட்பு
இறந்த நிலையில் யானை ஒன்று ஒட்டன்குளம் விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் கிராம மக்களால் இறந்த நிலையில் குறித்த யானை அடையாளம் காணப்படுள்ளது.
விவசாயிகள் கிராம அலுவலருக்கு தகவல்
வயலுக்கு சென்ற விவசாயிகள் கிராம அலுவலருக்கு வழங்கிய தகவலை அடுத்து , ஒட்டு சுட்டான் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் கிராம அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை பெண்யானை எனவும் , 6 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட 15-20 வரையிலான வயதினை கொண்டதெனவும் , குறித்த யானையின் பின் வலக்கால் கண்ணிவெடி தாக்குதலில் சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் நாளை (05.08.2023) இடம்பெறும் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
