புத்தளம் - வண்ணாத்திவில்லு கலா ஓயாவில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் சடலமாக மீட்பு

Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Asar Jul 30, 2024 08:14 AM GMT
Report

புத்தளம் - வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு முன்னால் உள்ள கலா ஓயா ஆற்றிற்கு குளிக்கச் சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று(29.07.2024) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வந்தனாகம, கலங்குட்டிய, கல்நேவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய எச்.எம். வசந்த பிரியதர்ஷன திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெஹலியவின் பிணை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கெஹலியவின் பிணை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பொலிஸ் விசாரணை

நேற்று முன்தினம்(28)மாலை சடலாக மீட்கப்பட்டவர் உட்பட நால்வர் குளிப்பதற்கு கலா ஓயா ஆற்றிற்கு சென்றுள்ள நிலையில், அவர்கள் அளவுக்கு அதிகமான மது அருந்தியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தளம் - வண்ணாத்திவில்லு கலா ஓயாவில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் சடலமாக மீட்பு | A Dead Body Recovered From Kala Oya

இதன்போது, குளிப்பதற்காக வருகைத் தந்த மற்றுமொரு குழுவினருடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்டவர் தவிர்ந்த ஏனைய குழுவினர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தப்பிச் சென்ற குழுவினர், சடலமாக மீட்கப்பட்டவரைத் தேடி மீண்டும் கலா ஓயா ஆற்றிற்கு வருகைத் தந்துள்ளனர்.

எனினும், குறித்த நபரை காணாததையடுத்து வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நேற்று(29) காலை பொலிஸார் மற்றும், உயிரிழந்தவரின் நண்பர்களும் கலா ஓயாவின் இருபுறமும் மேற்கொண்ட தேடுதலில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுவாங்குளம் பகுதியில் உள்ள சுற்றுலா பங்களாவை திருத்துவதற்காக வருகைத் தந்ததாகவும், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் - வண்ணாத்திவில்லு கலா ஓயாவில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் சடலமாக மீட்பு | A Dead Body Recovered From Kala Oya

அத்துடன், கலா ஓயாவில் நேற்று முன்தினம்(28) இரு குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின் பின்னரே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு புத்தளம் நீதிமன்ற பதில் நீதவான் வசீம் ராஜா வருகைத் தந்து சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ​​சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் கனடா செல்ல காத்திருந்த இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்

முல்லைத்தீவில் கனடா செல்ல காத்திருந்த இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை

பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US