மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்த மருமகள்
வயோதிப மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தனது குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெண்ணொருவரை கம்பளை(Gampala) ஹெட்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உலப்பனை தோட்டத்தில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான ஜோதி என்ற 78 வயதுடைய வயோதிப பெண்ணே மருமகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரான குறித்த பெண் திருமணம் முடித்து உலப்பனை தோட்டத்தில் வயோதிப மாமியார் மற்றும் தனது 7, 4 வயது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி கொலைச் சம்பவம் நேற்று(06) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய வயோதிபப் பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது சந்தேக நபரான பெண் வீட்டினை மூடிக்கொண்டு தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி பொலிஸாரை நெருங்க விடாமல் தடுத்துள்ளார்.
இந்த நிலையில், பொலிஸார் யாழ்ப்பாணத்தில் வந்த சந்தேக நபரான பெண்ணின் கணவருடன் தொடர்புகொண்டு பெண்ணிடம் கலந்துரையாடி இன்று(07) அதிகாலை கைது செய்துள்ளனர்.

மேற்படி, கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் காந்திலதா மேற்கொண்டுள்ளதுடன் ஹெட்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam