கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டென்ட் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்டென்ட் என்பது நரம்புகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் உடல் திரவங்களின் தடையற்ற ஓட்டத்தை அனுமதிக்க அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்படும் ஒரு சிறிய குழாய் ஆகும்.
இறக்குமதி செய்ய உத்தரவு
நோயாளர்களின் கருத்துப்படி, பல நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளதுடன், ஸ்டென்ட் தட்டுப்பாடும் காணப்படுவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டென்ட்களை இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
