காலிக்கு அருகில் சென்ற கப்பல் ஒன்றின் ஊழியர் மரணம்
காலி துறைமுகத்திற்கு அருகில் பயணம் செய்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றில் சுகவீனமுற்ற ஊழியர் ஒருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இறந்து காணப்பட்டதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கப்பல் உணவகத்தில் பணிப்புரிந்த பிலிப்பைன்ஸ் பிரஜை
மார்ஷல் தீவுக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் உணவகத்தில் தொழில் புரிந்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மிச்சேல் மலாகா என்ற 43 வயதான கப்பல் ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமது கப்பலின் ஊழியர் சுகவீனமுற்றிருப்பதாகவும் அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக கரைக்கு அழைத்துச் செல்லுமாறு கப்பலின் மாலுமியிடம் இருந்த கிடைத்த தகவலை அடுத்து கப்பல்களுக்கு சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் ஒன்று பிலிப்பைன்ஸ் பிரஜையை கடந்த 26 ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இறந்து காணப்பட்ட ஊழியர்
துறைமுகத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மருத்துவர், நோயாளிக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியுள்ளதுடன் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும் அந்த நோயாளி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இறந்து காணப்பட்டதாக வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
