திருக்கோணமலையில் 3 ஏக்கர் வேளாண்மையை தானம் செய்த தம்பதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியிலுள்ள 3 ஏக்கர் வேளாண்மையை தம்பதிகள் தானம் செய்துள்ளனர்.
கெமுனு திஸ்ஸ மற்றும் அவரது மனைவி தம்மிகா தமயந்தி என்ற தம்பதியினரே இவ்வாறு 3 ஏக்கர் வேளாண்மையை இன்று (10.01.2024) தானம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட போராளிகளுக்கு நடந்தது என்ன: மன்றில் சிறீதரன் சீற்றம்
விகாரைகளுக்கான உதவி
ஒவ்வொரு வருடமும் வேளாண்மை செய்து பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் உதவி செய்கின்ற நிலையில் இம்முறை தமது பெற்றோர்களுக்காக தானம் செய்யும் நோக்கில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்துள்ளார்.
மஹதிவுல்வெவ-திம்பிரிவெவ ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் ஆசிர்வாதத்துடன் சமய வழிபாட்டுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதன் போது கிராம மக்களும் கலந்து கொண்டு சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மாடுகளையும் வேளாண்மை உண்பதற்காக கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
