வீடொன்றிற்குள் தம்பதியினர் வெட்டி படுகொலை! பொலிஸார் தீவிர விசாரணை
அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற திருமணமான தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர். குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சில காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan