இலங்கையில் சொத்துக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட தம்பதி
தென்னிலங்கையில் வீடொன்றினுள் வயோதிபத் தம்பதியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் அம்பலாந்தொட்ட பொலன ருஹுனு ரிதிகம 3ஆம் மைல் பகுதியில் வீடொன்றினுள் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மைத்துனர் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து கோடரி மற்றும் கத்தியால் தம்பதியை தாக்கி இரட்டைக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் 61 வயதுடைய கணவன் மற்றும் 56 வயதுடைய மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நீண்டகால நிலத்தகராறு காரணமாக இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
