துப்பாக்கி பிரயோகம் இல்லாத போர்ச்சூழல்! செல்வம் அடைக்கலநாதன் விடுத்த அறைகூவல்
இன்றைக்கும் துப்பாக்கி பிரயோகம் இல்லாத சூழ்நிலையிலும் எங்களுடைய மக்கள் போர்ச்சூழலிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகிறது என செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று(01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்களின் விடுதலைக்காக உணர்வு ரீதியான பங்களிப்பும் இந்த மே தினத்திலே நினைவு கூற வேண்டும். தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தல் வாக்கு வேட்டைக்காக எங்களை பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
கூட்டமைப்பிலே அனைத்து தேசிய கட்சிகளும் இணைய வேண்டும் என்பது என்னுடைய பிரதானமான கோரிக்கையாக இந்த மே தினத்திலே அறைக்கூவல் விடுக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளிலே உள்ள மக்கள் எங்களோடு இணைந்து வேலை செய்ய ஆவலோடு தயாராக இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |