யாழில் பச்சிளம் குழந்தை மரணம்: பிரேத பரிசோதனையில் வெளியாகிய தகவல்
யாழ். வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று போதிய போசாக்கின்மை காரணத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
போதிய போசாக்கின்மை காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலில் போதிய போசாக்கின்மை
குழந்தையின் தாயாருக்கு உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பாலில் போதிய போசாக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: தீபன்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
