பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறமதியான உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணை குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கோரிக்கையை வடமாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் உலக வங்கியால் விவசாய நவீனமாக செயல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட தேர்வு செய்யப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்கப்பட இருந்த விதை உருளைக்கிழங்கு கிருமித் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்போதைய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த அம்பலவாணர் சிவபால சுந்தரன் குறித்த விடயம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடலில் மனிதனுக்கு தீங்கை விளைவிக்கக் கூடிய ஆபத்தான நுண்ணங்கிகள் காணப்படுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் உருளைக்கிழங்கை மண்ணுக்குள் புதைத்தால் ஆபத்து ஏற்பாடு என கூறிய நிலையில் எரியூட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கேள்விகளை எழுப்பினர்.
விவசாய நவீனமாக்கல் செயல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான விலை உள்ள கிழங்கை கொழும்புக்கு இறக்குமதி செய்தவர் யார் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தவர் யார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் எல்லாமே கொழும்பு தான் என அதிகாரிகள் பதிலளித்தனர்
. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் விடப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விவசாய அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் மூன்று மாதங்கள் கடந்தும் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெறவில்லை.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் விசாரணை அறிக்கை எங்க என கேள்வி எழுப்பினார் .
இதன் போது பதிலளித்த கிளிநொச்சில் உள்ள விவசாய நவீன மக்கள் செயல் திட்ட உதவிப் பணிப்பாளர் விஜிதரன், அமைச்சின் விசாரணை அறிக்கை தமக்கு கிடைக்கப் பெறவில்லை கிடைத்ததும் வழங்குவதாக தெரிவித்தார்.
இதன்போது குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அமைச்சின் விசாரணை அறிக்கை வருமா என்ற சந்தேகம் எழும் நிலையில் ஆளுநர் மாகாண மட்டத்தில் ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர் கிளிநொச்சியில் அமைந்துள்ள விவசாய நவீன மயமாக்கல் செயல் திட்டம் எங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சில தேவைக்கு மட்டும் தான். விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு பழுதடைந்தமை வழங்கப்பட்ட பின்னரே தெரியும். நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதற்கு இணங்க குறித்த விடையார் தொடர்பில் மாகாண மட்டத்தில் ஒரு விசாரணை அழகிய தனக்கு வழங்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஜெகுவிடம் பணிப்புரை விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |