இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்பும் வகையில் அனைத்து இன மக்களும் முன்வர வேண்டும் என அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து நேற்று (30) மாலை விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கு கருத்து வெளியிடுகையில்,
சமூக ஊடகங்களின் ஆதிக்கம் தற்போது எம் சமூகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இனங்களுக்கு இடையே பிழையான செய்திகள் அதிகமாக பகிரப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், சரியான தகவலை வழங்கக் கூடியதாக சிவில் சமூக அமைப்புக்களிடம் உரிய தரப்பினர் உண்மையான செய்திகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது எமது நாடு முகங்கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு விடயமும் முதன்மையான விடயமும் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்துவதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக அவர்கள் விவரிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |