பௌத்த துறவியொருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
பௌத்த துறவி ஒருவர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேசிய பிக்கு முன்னணியின் ஊடக செயலாளர் கொஸ்வத்த மகாநாம தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியே இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரரான தங்கல்ல சாரத தேரர், தமது மனுவில், பொலிஸ் அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னகூன், தலங்கம காவல் நிலைய பொறுப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக யோசனைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜூலை 8 ஆம் திகதி பத்தரமுல்ல சந்தியில் கூடியிருந்தனர்.
இதன்போது எதிர்ப்பாளர்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முகக் கவசங்களை அணிந்து ஒரு மீட்டர் தூரத்தில் வரிசையாக நின்றதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முற்பகல் 11 மணியளவில், ஒரு குழுவினர் எதிர்ப்பாளர்களைக் கலைக்க அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தினர். அத்துடன் ஆட்கொணர்வு மனுவில் கூறப்பட்டவர் உட்பட்ட சுமார் 30 பேரை கைது செய்தனர்.
இதன்பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் அனுமதிப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிடப்படும் தேரர் மற்றும் பலர் சுகாதார அதிகாரிகள் அல்லது என்டிஜென் சோதனை அல்லது பி.சி.ஆர் சோதனை இல்லாமல் முல்லைத்தீவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மனுதாரர் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam
