இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்! பலர் கண்டனம் (Video)

Sri Lanka Sri Lankan Peoples India Sri Lanka Government
By Kajinthan Aug 22, 2023 11:42 PM GMT
Report

காங்கேசன்துறை கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வடமாகாண கடற்றொழிலாளர்கள் சார்பில் கண்டிப்பதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று(22.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கொடூரமான முறையில் தாக்குதல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை காங்கேசன்துறை கடல் எல்லையில் வைத்து இந்திய நாட்டு படகு கடற்றொழிலாளர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்! பலர் கண்டனம் (Video) | A Brutal Attack On Indian Fishermen

எமது வடபகுதி கடற்றொழிலாளர்கள் இந்தியா ரோலர் மீன்பிடி படகுகளால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை சற்று குறைந்துள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் எமது கடற்றொழிலாளர்களையும் இந்திய கடற்றொழிலாளர்களையும் தூண்டிவிடும் நோக்கில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

கடற்றொழிலையே வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் இந்தியா கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் பல இலட்சம் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களும் சூறையாடப்பட்டுள்ளது.

ஆகவே தாக்குதலுக்கு உள்ளான கடற்றொழிலாளர்கள் உடல்நலம் தேர்ச்சி பெறுவதுடன் குறித்த தாக்குதலை வடமாகாண கடற்றொழிலாளர்கள் சார்பில் கண்டிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து

இதேவேளை இலங்கை கடற்பரப்பிலேயே சகோதர கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டமை கவலை அளிக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது என ஊர்காவற்துறை கடத்தொழிலாளர் சமாசங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்! பலர் கண்டனம் (Video) | A Brutal Attack On Indian Fishermen

குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண மக்கள் அல்லது வடமாகண கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்களின் விடயத்தில் வன்முறையை விரும்பியதும் இல்லை, வன்முறையை நோக்கி பயணிப்பதும் இல்லை.

இந்த கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் எப்பொழுது அறவழியிலும், ஜனநாயக வழியிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம்.

கடந்த காலத்தில் இதுபோன்ற செயல்கள் வடக்கில் ஊக்குவிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் இருந்த போதும் கூட நாங்கள் எங்களது கடற்றொழிலாளர்களை வன்முறைக்கோ அல்லது யுத்தத்திற்கும் நாங்கள் செல்லவிடாது தடுத்தோம்.

ஏனென்றால் இது ஜனநாயக ரீதியில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். எங்களை பொறுத்தவரையில் காரைக்கால் கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டமை கவலையளிக்கின்ற ஒரு விடயம்.

அதேவேளை இலங்கை அல்லது இந்தியகடற்றொழிலாளர்களாக இருந்தாலும் கடற்பரப்பில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக நாட்டு படகிலே வந்து மீன்பிடிக்கின்றார்கள். இது குறித்து நாங்கள் இன்றையதினம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் சங்கங்கள், சமாசங்கள் ஆகியவற்றை விசாரித்த வகையில், என்றைக்குமே நாங்கள் இவ்வாறான சம்பவங்களை செய்ய விரும்பவில்லை, செய்ததும் இல்லை.

இதற்கும் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற செய்தியை எமக்கு தெரிவித்திருந்தார்கள். எனவே இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் எப்போதும் இடம்பெறக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US