அரசாங்கத்துக்கு எதிரான பரந்த கூட்டணி! தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை
அரசாங்கத்துக்கு எதிரான பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாக நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
அரசாங்கத்துக்கு எதிரான பரந்த கூட்டணி
அதில் எதிர்க்கட்சியின் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சஜித் பிரேமதாசவுடன் நீண்ட கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் குறித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் சுதந்திரக் கட்சி தலைமையத்துக்குச் சென்று அங்கும் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டனர்.
சுதந்திரக் கட்சியின் தலைமையக கலந்துரையாடல் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது