யாழில் சந்தை வியாபாரி மீது மூர்கத்தனமான தாக்குதல்
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பொதுச்சந்தையில் மரக்கறிவகைகள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் மீது அடையாளம் தெரியாத இருவர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (02.08.2023) இடம்பெற்றுள்ளது.
தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவரது முச்சக்கர வண்டியை வழிமறித்த முக கவசம் அணிந்த இருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கண்ணாடி போத்தலினால் தாக்கப்பட்ட மரக்கறி வியாபாரி படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மரக்கறி வியாபாரி குரல் எழுப்பியபோது அயலவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
குறித்த சம்பவத்தில் புலோலி சிங்கநகரை சேர்ந்த ஜெகன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய இரு சந்தேகநபர்களும் உந்துருளியில் தப்பிச்
சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தொடரில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மரக்கறி வியாபாரி மீது மூன்றாவது தடவையாக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |