பாடசாலை மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது
கதிர்காமம் தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பொலிஸாரால் நேற்று(14) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கதிர்காமம் ராஜா மாவத்தையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மருத்துவ பரிசோதனை
பாடசாலை அதிபரின் முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, 16 வயது சிறுமி, குறித்த இளைஞருடன் பழகியதை ஏற்றுக்கொண்ட போதும், தாம் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
எனினும், அவர் மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேவேளை பாடசாலை மாணவிகள் தொடர்ந்தும் துஸ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் நாள் தோறும் செய்திகளாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
