வவுனியா நகரில் இராணுவ பிக்கப் ரக வாகனம் மோதி இளைஞன் படுகாயம்
வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனமும் - மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து புகையிரத வீதி நோக்கி மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மக்கள் வங்கி முன்பாக நின்ற இராணுவ பிக்கப் ரக வாகனம் வீதியில் திடீரென திரும்ப முற்பட்ட வேளை மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan