ஏறாவூரில் கடலி்ல் நீராடச்சென்ற சிறுவன் மாயம்
மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னைக்குடா கடலில் நீராடச்சென்ற சிறுவன் காணாமல்போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் எல்லை வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய ஜெகன் லதுஷன் என்பவரே நேற்று (28) மாலை கடலில் மூழ்கிய நிலையில் காணாமல்போயுள்ளார்.
பொலிஸ் விசாரணை
நண்பர்களுடன் இவர் புன்னைக்குடாக் கடலுக்குச் சென்று நீராடிக்கொண்டிருக்கும் போது கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடைசியாக அவரது வீட்டுக்கு அண்மையிலுள்ள தேவாலயத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சிறுவனை தேவாலய வகுப்பிலுள்ள ஆசிரியை கண்டதாக கூறியதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.
தேடுதல் நடவடிக்கை
உடனடியாக உதவிக்கு விரைந்தோர் தேடிய போதிலும் மூழ்கிய சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தொடர்ந்தும் இன்று (29) மாலை வரை மூழ்கிய சிறுவனைக் கண்டுபிடிக்க புன்னைக்குடா கடலில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சிறுவன் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri