சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல்: முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியதில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம்(20.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த சிறுவன் வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது.

இதனையடுத்து அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த பகுதி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam