இரண்டாம் உலகப்போரில் புதைந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது
சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காத நிலையில் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன.
இந்த நிலையில் சாலமன் தீவுகளின் தலைநகர் ஹோனியாராவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திங்கட்கிழமை அதிகாலையில் தங்களின் 2 மகன்களுடன் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது அவர்கள் குளிர்காய்வதற்காக மண்ணில் குழி தோண்டி விறகுகளை போட்டு நெருப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த வேளை சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த வெடிவிபத்தில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி மற்றும் மற்றொரு மகன் பலத்த காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தவலறித்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போது சென்று குளிர் காய்வதற்காக நெருப்பு வைத்த இடத்தில் மண்ணுக்கு அடியில் இருந்த 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளதை கண்டுள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,