மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
மட்டக்களப்பு (Batticaloa) - வாழைச்சேனையிலுள்ள வாகனேரி காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்று (29.04.2024) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு (Colombo) பிரதான வீதிக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது.
வாகனேரி காட்டுப் பகுதியிலுள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதை பொதுமக்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சடலம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
