தமிழ் அரசியல்வாதி ஒருவரின் மோசமான செயல்! பௌத்த தேரரால் அம்பலமான தகவல்
மத்திய மாகாணத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரண்டை பெற்றுக்கொண்டு அவற்றை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் திகன பகுதியைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உறுதிமொழி
ஆளும் கட்சியில் இணைந்துகொள்வதாக உறுதிமொழி வழங்கி இந்த தமிழ் அரசியல்வாதி இரண்டு மதுபான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து திகன பிரதேச பௌத்த விகாரையொன்றின் மாநாயக்க தேரர் குறித்த வர்த்தகர்களை அழைத்து இது குறித்து வினவியுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரே மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களை தமக்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
200 மதுபான அனுமதிப்பத்திரங்கள்
இந்த விடயம் தொடர்பில் குறித்த பௌத்த பிக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
தேர்தலில் எதிர்க்கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள 200 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிலர் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள் தமது ஆட்சியின் போது ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.