மட்டக்களப்பு - தாந்தாமலை ஆலயத்திற்கு சென்றவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு(Batticaloa) - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை காட்டுப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று(23.07.2024) மீட்கப்பட்டுள்ளது.
39ஆம் கிராமம், செல்வாபுரத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான செல்வநாயகம் லிங்கேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கடந்த ஞாயிறுக்கிழமை(21) தனது வீட்டிலிருந்து தாத்தாமலை முருகன் ஆலயத்திற்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் ஆலயத்தை அண்டிய பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கால்நடைகளை பராமாரிப்பதற்கு சென்று ஒருவர் காட்டின் மலைப் பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தகவல் வழங்கியதன் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் பணிப்புரைக்கு அமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
