வெற்றிலைக்கேணி காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் படகின் வெளியிணைப்பு இயந்திரம் மீட்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி காட்டுப்பகுதியில் படகு ஒன்றின் வெளி இணைப்பு இயந்திரம் ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (25.10.2024) இடம்பெற்றுள்ளது.
ஆழியவளையை சேர்ந்த நபர் ஒருவர் நாவல் பழம் பறிப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்றவேளை மணலில் புதையுண்ட நிலையில் 25 குதிரை வலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரத்தை கண்டறிந்துள்ளார்.
பொலிஸாருக்கு அறிவிப்பு
இந்நிலையில், இது தொடர்பில் உடனடியாக ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தலைவருக்கு தெரியப்படுத்தியதுடன் பொலிஸாருக்கும் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் வெளி இணைப்பு இயந்திரத்தை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக தமது சங்கத்தின் காவலில் வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam