மன்னார் கடற்கரையில் ஆட்கள் இன்றி கரை ஒதுங்கிய படகு
மன்னார் (Mannar) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்கள் இல்லாத நிலையில் கடற்றொழில் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த படகானது, இன்று (26.05.2024) காலை சௌத்பார் கடற்கரை பகுதியில் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த படகில் வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், படகினுள் கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் வலைகள் மற்றும் மீன்களும் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், சௌத்பார் கடற்படையினர் குறித்த படகை மீட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, இந்த படகு தொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களின் படாக அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து காற்றினால் அடித்து வரப்பட்டதா என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
