வவுனியாவில் ஆறு மாத குழந்தையொன்று கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு
Vavuniya
Covid death
Pcr test
Thonikkal
By Independent Writer
வவுனியாவில் 6 மாத குழந்தையொன்று கோவிட் தொற்றுக்கு இலக்காகி பலியாகியுள்ளது.
குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரும் கோவிட் தொற்றிற்கு இலக்காகி நேற்றைய தினம் இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US