தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள 16 வயது மாணவி
வவுனியா - கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் வீட்டில் யாருமற்ற நிலையில் தங்கையுடன் குறித்த சிறுமி இருந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் தூக்கில் தொங்கியிருப்பதை அவதானித்த அவரது தங்கை அயலவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கற்குழி பகுதியை சேர்ந்த சதுசியா (வயது 16) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதுடன், அவர் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam