இவரைக் கண்டால் பொலிஸாருக்கு அறிவிக்கவும்
ஜா - எல, ஏக்கல, கோரலெலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதான சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கோஷிலா ரோஷன் என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் வகுப்புக்கு செல்வதாகத் தெரிவித்து வீட்டிலிருந்து புறப்பட்டதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய காட்சி
இந்நிலையில், 12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் வீட்டின் சிசிரீவி கமெராவில் பதிவாகியுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய், "மகளைப் பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை. நாங்கள் இனியும் காத்திருக்க முடியாது. யாராவது எனது மகளைக் கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குங்கள்" என கூறியுள்ளார்.
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri