இணையம் மூலம் விற்கப்பட்ட 15 வயதான சிறுமி! - இதுவரையில் 18 பேர் கைது
15 வயதான சிறுமியை இணையத்தில் விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கல்கிஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுமி சுமார் மூன்று மாதங்களாக இந்த முறையில் பல்வேறு வலைப்பக்கங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் சிறுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி பல்வேறு நபர்களுக்கு 10,000 ரூபா முதல் 30,000 ரூபா வரை விற்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சுமார் 20 பேரை கைது செய்ய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
