யாழில் 9ஆவது சர்வதேச யோகா தின செயற்றிட்டம் முன்னெடுப்பு (Photos)
ஒன்பதாவது சர்வதேச யோகா தின நிகழ்வு யாழ்ப்பாணம் - இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று (21.06.2023) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யோகா தின நிகழ்வில் யோகா பயிற்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சி முன்னெடுப்பு
குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி, யாழ். இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை யோகா பயிற்சி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வியிலாளர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




