வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
9ஏ சித்திகளைப் பெற்று சாதனை
குறித்த பெறுபேற்றிலேயே விபுலானந்தா கல்லூரி மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் காண்டீபன் கிருஸ்சிககேசன், ஸ்கந்தராசர்மா கஜானன், குணதரசர்மா சருஜசர்மா, இராமகிருஸ்ணன் வோகித், சிவராசா தட்சாயினி, கந்தராசா டிஜானா, திலகநாதன் ஹரிணி, உதயதாசன் யதுசன், நிலாந்திரன் துபதாசன், யோகேஸ்வரன் ரஜீவ் ஆகிய 10 மாணவர்களும் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன், 02 மாணவர்கள் 8ஏ,பீ சித்திகளையும், 04 மாணவர்கள் 7ஏ 2பீ சித்திகளையும், 01 மாணவர் 7ஏ,பீ,சி சித்தியையும், 01 மாணவர் 7ஏ பீ,எஸ் சித்தியையும், 01 மாணவர் 7ஏ 2சீ சித்தியையும் பெற்றுள்ளனர்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
