திரிபிடக தர்மம், பாலி மொழி பரீட்சை எழுதிய 93 வயதான பாட்டி
கண்டியில் 93 வயதான பாட்டியொருவர் சனிக்கிழமை திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி தேர்வு எழுதியுள்ளார்.
விதானகே லீலவதி எஸ்லின் தர்மரத்னே என்ற பாட்டியே கண்டியிலுள்ள டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதியுள்ளார்.
ஸ்ரீ சுமங்கல நினைவு மையத்தின் வித்யோதயா பரீட்சைக் கிளையினர் நடத்திய பரீட்சையிலே குறித்த பாட்டி திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
1928 இல் பிறந்த பாட்டி, களனி பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டப் படிப்புக்கு அனுமதியைப் பெறுவார் என்று நம்புகிறார். அவர் பி.ஏ. பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
குறித்த பாட்டி பரீட்சை எழுதியமை மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருந்தது என பரீட்சை கண்காணிப்பாளர் லசித் மவில்மட குறிப்பிட்டுள்ளார்.