நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் 90வது பொதுக்கூட்டம்
நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் 90 வது மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (28) மாலை நுவரெலியா கூட்டுறவு விடுதியில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு இலங்கை விளையாட்டு துறை அமைச்சின் உறுப்பினர்களும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் நிர்வாகப் பிரிவினர் மற்றும் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் 2024 ஆம் ஆண்டு அங்கம் வகிக்கும் 27 அணிகளின் தலைவர் மற்றும் செயலாளர்களின் பங்குப்பற்றளுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
புதிய நிர்வாக குழு
இதன்போது நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக குழு இலங்கை விளையாட்டு துறை அமைச்சின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகப் பிரிவினரின் முன்னிலையில் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.
இக்குழுவின் தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட்டதோடு பிரதான நிறைவேற்று அதிகாரியும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
