முகநூலில் அவதூறு பிரச்சாரம் தொடர்பில் 900 முறைப்பாடுகள்
முகநூலில் அவதூறு பிரச்சாரம் தொடர்பில் சுமார் 900 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்ற விசாரணை திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவிற்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இணையத்தில் ஆபாச காணொளிகள், புகைப்படங்கள் பிரசுரம் செய்தல் மற்றும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் மூன்று மாத காலப் பகுதியில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 15 வயது சிறுமி பாலியல் குற்றச் செயல், பஹான்துடாவ சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூலின் ஊடாக அவதூறு பிரச்சாரங்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகநூல் கணக்குகளை ஹெக் செய்தல், போலிக் கணக்குகளைப் பேணியமை என்பனவே பெரும்பான்மையான முறைப்பாடுகளாகும்.
பண மோசடி தொடர்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நைஜீரியா பிரஜைகள் இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவங்களும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமையக் குற்ற விசாரணை திணைக்களம், கணினி குற்றவியல் பிரிவு ஒன்றை நிறுவி அதன் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.