நீதிமன்ற தண்டனைகளை அனுபவிக்கும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 90 பேர்..
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதை பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள்களை உடைமையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 90 பேர் வரையில் நீதிமன்ற தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வருவதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பன அதிகரித்து செல்கின்றன.
போதைப்பொருள் பாவனை
இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தமை மற்றும் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை போதைப் பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இதுவரை 90 க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri