சிறுமி சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
குருணாகல், ஹெட்டிபொல பகுதியில் சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மகுலகமவில் பகுதியில் பன்றிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 9 வயதான சிறுமி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம்
இந்நிலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 12 போர் ரதுப்பாக்கி மற்றும் இரண்டு வெற்று குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
நேற்றிரவு ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் காயமடைந்த சிறுமியும் அவரது பாட்டியும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த பெண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்த சிறுமியின் சடலம் குளியாபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
