மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் தங்க சங்கிலிகள் கொள்ளை
மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய இறுதி நாள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு ஆலய தரிசனதில் ஈடுபட்ட வயது முதிர்ந்த 4 பெண்களின் 9 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாடு இன்று (17.08.2023) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த திருட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஆலய தரிசனத்துக்காக சென்று அங்கு அன்னதானம் வாங்கிய பின்னர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாகவும் திருடர்கள் திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |