யாழில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது (Photos)
யாழில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (18.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி, பாற்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளைச் சேதப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், சம்பவத்துக்குப் பயன்படுத்திய இரண்டு வாள்கள், ஒரு கை கோடரி, ஒரு இரும்பு கம்பி, மடத்தல், சம்பவத்துக்குப் பயன்படுத்திய பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேக நபர்களிடம் விசாரணைகளைச் செய்தபோது கல்வியங்காடு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் அனுப்பிய பணத்தின் மூலமே சம்பவத்தைச் செய்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும், இவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நாளை (19.08.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.











