நெடுந்தீவில் கைதான 9 இந்திய கடற்றொழிலாளர்கள்..! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சீ ஒப் ஸ்ரீலங்கா நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(31.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
9 இந்திய கடற்றொழிலாளர்களுக்கான உத்தரவு
சீ ஒப் ஸ்ரீலங்கா நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான வழக்கு இன்று(31) நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது 9 இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும் 4 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதனை செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 8 பேருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கபட்ட 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.