கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்று காரணமாக 9 வீடுகள் சேதம்
கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதனால் 9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தற்போதுள்ள சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 7 வீடுகளும், கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு வீடுகளும் இவ்வாறு காற்றினால் சேதமடைந்துள்ளதாகவும், அதனால் 9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருவதாகவும், பாதிப்பினை எதிர்கொண்ட குடும்பங்களிற்கான உதவிகளைப் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீசிய காற்றினால் ஏற்பட்ட விவசாய பாதிப்புக்கள் தொடர்பிலும் அவ்வந்த
திணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.