யாழில் 9 பேர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(26.09.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும், இரண்டு மோட்டார் சைக்கிளிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த கும்பல் ஒன்றினை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
விளக்கமறியல்
இதன்போது, காரினுள் கூரிய ஆயுதங்களும், 09 இலட்ச ரூபாய் பணமும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த 9 பேரையும் கைது செய்ததுடன், அவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களை இன்றைய தினம்(27.09.2026) யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.