மத்திய கிழக்கில் 89 இலங்கை தொழிலாளர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
2020 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய கிழக்கில் 89 இலங்கை தொழிலாளர்கள் கொரோனா காரணமாக இறந்துவிட்டதாக தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டில் வசிக்கும் 3,923 இலங்கை தொழிலாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3834 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டி சில்வா கொரோனா காரணமாக மத்தியகிழக்கில் இறந்துப்போன 89 பேரில் 60 இலங்கை வெளிநாட்டவர்கள் 40,000 ரூபா இழப்பீடு பெற தகுதி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 39 பேருக்கு அது வழங்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு 500,000 ரூபா ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கு உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றுநோய் பரவியதில் இருந்து 61,750 இலங்கை வெளிநாட்டினரை திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
41451 இலங்கையர்கள் திரும்பி வர தம்மை பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.