எண்பத்து ஐந்து வயது பாட்டியிடம் கொள்ளையிட்டவரை துரத்திப்பிடித்த பொலிஸ் அதிகாரி
எண்பத்து ஐந்து வயதான பாட்டியொருவரிடம் கொள்ளையிட்டவரை பொலிஸ் அதிகாரியொருவர் துரத்திப் பிடித்த சம்பவமொன்று பாணந்துறையில்(Panadura) நடைபெற்றுள்ளது.
பாணந்துறை அருகே எகொட உயன பிரதேசத்தைச் சேர்ந்த எண்பத்தி ஐந்து வயதான பாட்டியொருவர் பாணந்துறை நகரின் நடைபாதையில் வர்த்தகம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் அவரது கையில் இருந்த பணப்பையை நேற்றைய தினம் திருடன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.
பொலிஸ் அதிகாரி
அதனைக் கண்ட பாணந்துறை பின்வத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவர், மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று திருடனை பிடித்து கட்டி இழுத்து வந்துள்ளார்.
அத்துடன் பாட்டியிடம் இருந்து பறிக்கப்பட்ட பணப்பையையும் மீட்டுக் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட திருட்டுப் பேர்வழி புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபர் என்றும் அவர் வாகன திருத்துனராக தொழில் புரிவது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
