தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 85 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80475 ஆக இருந்த நிலையில் தற்போது 80560 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன தொடர்பில் தொடர்ச்சியாக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் பொலிஸாரும் தீவிரமாக கண்காணித்து வரும் போதும் தொடர்ச்சியாக சிலர் அசமந்த போக்குடன் செயற்படும் நிலையிலேயே கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
